கந்தளாயில் சட்டவிரோதமான முறையில் சாராய போத்தல்களை கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் 19 சாராய போத்தல்களைக் கொண்டு சென்ற நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேராறு,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரையே இன்று(13) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கந்தளாய் நகரிலிருந்து பேராறு பகுதிக்கு முச்சக்கரவண்டியில் அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற போது 19 போத்தல் சாராயத்துடன் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபர் பயன்படுத்திய முச்சக்கரவண்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
13,14,ஆம் திகதிகளில் மதுபான சாலைகளைத் திறக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்
விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
