தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 38ம் ஆண்டு நினைவு நிகழ்வு!
தியாக தீபம் திலீபனின் 38ம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றையதினம் வடக்கு கிழக்கின் பல பாகங்களின் இடம்பெற்றுவருகின்றது.
தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு, இன்று(26) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது.
நினைவு நிகழ்வு
சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நினைப்பேருரைகளும் இடம்பெற்றன. குறித்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து தியாக தீபம் திலீபனுக்கான அங்சலி செலுத்தியிருந்தார்கள்.
தியாக தீபம் திலீபன் ஆகுதியான நேரமான காலை 10.48 மணிக்குச் சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை, தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (26)திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலிலும் இடம்பெற்றது.
இதனை சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றினைந்து ஏற்பாடு செய்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38 வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் மதியம் 12 மணிக்கு ஆரம்பித்ததுடன், பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து,திலீபனின் உருவப்படத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி சாவைத் தழுவிக் கொண்டார்.
மேலதிக தகவல்-தீபன்
வேலணை
தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தின இறுதி நாளான இன்று(26.09.2025) தீவக நினைவேந்தல் குழுவினரால் வேலணை வங்களவடி பொது நினைவிடத்தில் நினைபுகூர்ந்து அனுஸ்டிக்கப்பட்டது.
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து தந்து உயிரை துறந்த தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டின் இறுதி நாழ் நினைவு நிகழ்வு இன்றாகும். குறித்த நினைவேந்தல் தமிழ் மக்கள் வாழும்மிடம் தோறும் அனுஸ்டிக்கப்பட்டது.
இன்நிலையில் தீவகத்தின் வேலணை வங்களாவடி பொது நினைவு தூபியில் நினைவு கூரப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டது. அத்தோடு தியாகி திலீபதிலீபனின் இறுதிநாள் நிகழ்வுகளின் ஓர் அங்கமாக வங்களாவடியில் உள்ள பொது நினைவு தூபியில் காலை 8 .30 மணிமுதல் அடையாள உண்ணாவிரதத்துடன் வேலணை மக்களால் நினைவேந்தப்பட்டது.
ஈகைச்சுடர்
குறித்த நிகழ்வு மூந்து மவீரர்களின் தாயாரால் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
தியாகி திலீபனின் திருவுருவ படத்திற்கு முன்னாள் பீராளியால் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வேலணை பிரதேச சபையின் தவிசாளர் மலர் தூவி அஞ்சலித்தார்.
அதனைத் தொடர்ந்து யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் மணிவண்ணன், மாநகரின் முன்னாள் உறுப்பினர் பார்த்தீன், தழிழரசுக் கட்சியின் மறைத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் கலயமுதன், வேலணை பிரதேச சபையின் உப தவிசாளர் வசந்தகுமாரன், உறுப்பினர்களான பிரகலாதன், கார்த்தீபன், நாவலன், ஞாரரூபன் உள்ளிட்டவர்கள் மலர்தூவி அஞ்சலுத்தனர்.
அதனைத் தொடர்ந்து கலந்துகொண்டவர்களால் மலர் அஞ்சலிகள் செலுத்தப்பட்டது.
மேலதிக தகவல்-தீபன்
கிளிநொச்சி
இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட பிரதேச சபைத்தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், நேற்று முன்தினம் ஐநாவில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா அவர்கள் கடந்த கொடிய யுத்தத்தின் போது எமது உறவுகள் ஒருவேளை உணவு கூட கிடைக்க முடியாமல் இருந்த வேளையில் பல தாய்மார்கள் தந்தையர்கள் சிறுவர்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தார்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டபாய ராஜபக்ச அப்பொழுது ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள்.
அன்றைய காலத்தில் முக்கிய பதவியை வகித்த அநுரகுமார திசாநாயக்க, அப்பொழுது நமது சகோதர உறவுகளுக்காக சிந்தாதகண்ணீரை தற்பொழுது காசாவில் இடம்பெறுகின்ற யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தனதுகவலை தெரிவிக்கின்றார்.
அப்படி இறக்க மனங்களை கொன்றவராக இருந்தால் ஏன் எமது உறவுகள் செத்து மடிந்த போது தனது அனுதாபங்களையும் எந்தவித ஆதங்கள்களையே தெறிக்க தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.
மேலதிக தகவல்- எரிமலை
அம்பாறை
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் காரைதீவு அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தநிகழ்வில் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் கட்சி ஆதரவாளர்கள் உறுப்பினர்கள் என பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.
தியாகி திலீபனின் தியாகம் வரலாற்றில் என்றும் தமிழினத்திற்கு வழிகாட்டி நிற்கின்றது என கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தனது உரையில் குறிப்பிட்டார்.
மேலதிக தகவல்-பாறுக் சிஹான்
முல்லைத்தீவு
முல்லைத்தீவு – வற்றாப்பளையில் தியாக தீபம் திலீபனின் 38ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் (26) இடம்பெற்றிருந்தது.
சமூக செயற்பாட்டாளரும், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான ஞா.யூட்சன் தலைமையில் வற்றாப்பளையில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நிகழ்வு இடம்பெற்றது.
நினைவு சுடர் ஏற்றத்தின் பின்னர் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இந்தநிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், பொது அமைப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலதிக தகவல்-ஷான்








பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
