நண்பனுடன் கடலுக்கு சென்ற யாழ் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்
யாழ். ஊர்காவற்றுறையில் நண்பனுடன் கடலுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை, புளியந்தோப்பைச் சேர்ந்த (வயது 27) உடையவரே ஊர்காவற்றுறைப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
ஊர்காவற்றுறை 9ஆம் வட்டாரத்திலிருந்து நேற்றிரவு நண்பருடன் ஜக்சன் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளார்.
ஜக்சனுக்கு மீன்பிடித் தொழிலில் அனுபவமில்லை. இந்தநிலையில், கடலினுள் நீரோட்டப் பாதையில் செல்லும்போது ஜக்சன் படகிலிருந்து இறங்கியுள்ளார்.
சுழியோட்டம் அறிக்கை
அந்தப் பகுதியில் சுழியோட்டம் அதிகமாக இருந்தமையால் அவர் இழுத்துச் செல்லப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
ஜக்சனுடன் சென்ற நண்பர் அவரைத் தேடிக் காணாத நிலையில் ஊருக்குத் திரும்பும் விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை ஜக்சனின் சடலம்
கரையொதுங்கியுள்ளது.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
