பசுமை புகையிரத நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருகோணமலை
உலக சுற்றுசூழல் தினத்தினை முன்னிட்டு, அகில இலங்கை புகையிரத நிலையங்களுக்கிடையிலான 'பசுமை புகையிரத நிலையம் ' என்ற கருப்பொருளில் நடாத்தப்பட்ட போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொண்ட, திருகோணமலை புகையிரத நிலைய பிரதம அதிபர் மற்றும் சக ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(8) நிலையத்தில் நடைபெற்றது.
ரிங்கோ எயிட் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, திருகோணமலை புகையிரத நிலையத்தில் நடைபெற்றது.
புகையிரத நிலையங்கள்
திருகோணமலை புகையிரத நிலைய பிரதம அதிபர் பிள்ளையாம்பலம் சர்வேஸ்வரனும், சக புகையிரத நிலைய ஊழியர்களும் இதன்போது பொன்னாடை கௌரவிக்கப்பட்டனர்.
இவ்வருடத்துக்கான உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, இலங்கையில் உள்ள புகையிரத நிலையங்களுக்கிடையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால், இந்த போட்டி நடாத்தப்பட்டது.
இதில், இலங்கையில் உள்ள 200க்கும் மேற்பட்ட, புகையிரத நிலையங்கள் பங்குபற்றி இருந்தன.
முதலாம் இடம்
முதலாம் இடத்தை திருகோணமலை புகையிர நிலையமும் இரண்டாம் இடத்தை உக்குவல மற்றும் பாதுக்கை ஆகிய இரண்டு நிலையங்களும் பெற்றுக் கொண்ட அதேவேளை, மாத்தறை புகையிரத நிலையம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
இதற்கான விருது வழங்கும் வைபவம் கடந்த வியாழக்கிழமை (5) கொழும்பில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற புகையிரத நிலையங்களுக்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இன்றைய நிகழ்வில், திருகோணமலை பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண சுற்றுலா பணியக தலைவர், திருகோணமலை மாநகர சபை செயலாளர் உட்பட பல அரச திணைக்கள அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

கொத்துக் கொத்தாக ஆடைகள் இன்றி புதைக்கப்பட்ட தமிழர்கள்: செம்மணி தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்!










