திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : பொலிஸ் பாதுகாப்புடன் விசாரணை ஆரம்பம்
திருகோணமலை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் அதன் சேத பகுப்பாய்வு குறித்து திருகோணமலை தடயவியல் பொலிஸார் அங்கு சென்று பரிசீலனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் உடைந்த பொருட்கள் மற்றும் கம்பி வேலி தொடர்பில் பரிசீலனை செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பௌத்த விகாரைக்காக பாதுகாப்பு
குறித்த பகுதியில் புத்தர் சிலை வைக்கும் போது (16)இரவு பொலிஸார் மூலம் அகற்றப்பட்டு மீண்டும் மறுநாள் (17)மதியம் அதே இடத்தில் குறித்த புத்தர் சிலையை திருகோணமலை துறைமுக பொலிஸாரின் பாதுகாப்புடன் மத சடங்குகளுடன் வைக்கப்பட்டது.

மேலும் அந்த பகுதி விகாரையில் இடம்பெற்ற சேத விபரங்களை அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு பரிசீலனைக்காக தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது குறித்த பௌத்த விகாரைக்காக பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறை முக பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri