திருகோணமலை - மட்டக்களப்பு A15 வீதி சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்

Trincomalee Eastern Province Floods In Sri Lanka
By Kiyas Shafe Dec 03, 2025 10:14 AM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

in சமூகம்
Report

​அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்குக் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட திருகோணமலை - மட்டக்களப்பு A15 பிரதான வீதியைச் சீரமைக்கும் பணிகள் இன்று (3) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெள்ள அனர்த்தத்தால் துண்டிக்கப்பட்டிருந்த மூதூர் பிரதேசம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான அதிரடி நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

​கனமழை

​கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால், A15 வீதி பலத்த சேதமடைந்தது. குறிப்பாக, முதூர் பிரதேசம் கடந்த ஐந்து நாட்களாக வெளி உலகத்துடனான தொடர்பை முற்றிலுமாக இழந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. ​

இதேபோல், மூதூர் இறால்குழி பிரதேசத்தில், சுமார் 800 மீட்டர் தூரமான வீதி வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தற்போது வாகனப் போக்குவரத்து செய்ய முடியாத அளவுக்குக் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றது. ​

திருகோணமலை - மட்டக்களப்பு A15 வீதி சீரமைப்புப் பணிகள் ஆரம்பம் | Trinco Batti A15 Road Rehabilitation Works Begin

இந்த நிலையில், துண்டிக்கப்பட்டிருந்த மூதூர் பிரதேசத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் நோக்கில், அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளது. ​

இந்த வீதி சீரமைக்கும் பணிகள் அனைத்தும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இயல்பு வாழ்க்கை

இதன்போது, மூதூர் 223 வது இராணுவ படைப்பிரிவின் கட்டளை தளபதி இந்திக்க குணவர்த்தன, கிண்ணியா 15 வது மைல் ராணுவ பொறுப்பதிகாரி கேனல் குமார, மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல். பி. ஜெயவர்த்தன ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

​சீரமைப்புப் பணிகள் குறித்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, "இன்றைய தினம் இன்னும் சில மணி நேரங்களில் சீரமைக்கும் பணிகள் நிறைவுபெறும்.

திருகோணமலை - மட்டக்களப்பு A15 வீதி சீரமைப்புப் பணிகள் ஆரம்பம் | Trinco Batti A15 Road Rehabilitation Works Begin

அதன் பின்னர் இன்றைய தினமே மக்கள் போக்குவரத்திற்காக இந்த வீதியைப் பயன்படுத்த முடியும் எனவும்" நம்பிக்கை தெரிவித்தார். ​

இதன் மூலம், ஐந்து நாட்களாகத் துண்டிக்கப்பட்டிருந்த பிரதேசம் மீண்டும் இணைக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

GalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US