முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று (03.02.2023) மாலை கனரக இயந்திரம் கொண்டு புதையல் தோண்ட முற்பட்ட வேளை இராணுவத்தினர் கொடுத்த தகவலுக்கு அமைய முல்லைத்தீவு பொலிஸாரால் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது புதையல் தோண்ட பயன்படுத்திய கார் ஒன்றும் கனரக இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சரீர பிணையில் விடுதலை
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் முள்ளியவளை பகுதியினை சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய ஆறு பேரும் அனுராதபுரம் பகுதியினை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் சான்றுப்பொருட்களையும் (04.02.2023) சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட
போது அவர்கள் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில்
விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
