சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்ல முற்பட்டவர்கள் மீண்டும் இலங்கை திரும்ப கோரிக்கை
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்வதற்கு முயற்சித்த இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 38 பேர் கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கு எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
மேலும் தெரிவிக்கையில், போலியான வெளிநாட்டு முகவர் மூலம் ஏமாற்றப்பட்டு கடலில் தத்தளித்து காப்பாற்றப்பட்டவர்கள் போல நாங்களும் போலியான முகவர் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளோம்.
ஒன்றரை வருட காலமாக சிறைத்தண்டனை
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி அழைத்துச் சென்று இந்தியாவிலே நடுத்தெருவில் எங்களை கைவிட்டு சென்றுள்ளார்கள். அதன்பின்னர் நாங்கள் பெங்களூரில் வைத்து கடந்த 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இதுவரை சிறையிலேயே வாடுகின்றோம்.
இங்கு நாங்கள் பல துயரங்களை அனுபவித்து வருகின்றோம். நாங்கள் இந்தியாவிற்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன என்பதுடன் சிறைக்குள் கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலமாக வாடுகின்றோம்.
இந்நிலையில் நாங்கள் இலங்கை அமைச்சர்களுடனும் தொடர்புகொண்டு பேசி இதுவரை எமக்கு எந்த தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. இலங்கை துணைத்தூதரகத்துடனும் தொடர்பில் இருக்கின்றோம்.
இலங்கையில் அரசியல்வாதிகளின் உதவியை நாடல்
எங்களை சிறையில் இருந்து விடுதலை செய்து வேறொரு இடத்திற்கு எங்களை direction center என்ற இடத்திற்கு மாற்றம் செய்து வழக்குகளை முடித்து நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கூறி நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு கட்டளையிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. அதை நாங்கள் எங்களது நாட்டில் உள்ள அமைச்சர்களுக்கும் நாங்கள் அனுப்பியுள்ளோம்.
2021ஆம் ஆண்டு எங்களை சாட்சியாகவும் பாதிக்கப்பட்டவர்களாகவும் மாற்றம் செய்துதான் direction centreக்கு மாற்றுமாறு கூறப்பட்டுள்ளது. ஆனால் direction center இல் ஏற்கனவே ஆட்கள் இருக்கிறார்கள் எனக்கூறி எங்களை சிறையில் வைத்துள்ளார்கள்.
வறுமை
நாங்கள் சிறைச்சாலையில் இருந்து உண்ணாவிரதம், போராட்டங்கள் போன்றவற்றை முன்னெடுத்ததன் பலனாகவே எங்களை direction centreக்கு மாற்றியுள்ளார்கள். இரண்டு தடவைகள் இலங்கை துணைத் தூதரகத்தினர் இங்கு வந்து எங்களை பார்வையிட்டனர்.
நாங்கள் இங்கிருந்து பல தரப்பினருக்கு கடிதங்கள் அனுப்பியும் எந்த நன்மையும் கிட்டவில்லை. நாங்கள் எங்களது நாட்டினை வெறுத்தோ அல்லது நாடு தேவையில்லை என்றோ கருதி இவ்வாறு புறப்படவில்லை.
எங்களது வறுமையின் காரணத்தினால் நாங்கள் எங்களது
குடும்பங்களையும் நாட்டினையும் பிரிந்து வந்து இவ்வாறு சிக்கித் தவிக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
