திருகோணமலையில் மீண்டும் ஆயுதங்களை தேடி அகழ்வுப்பணி
திருகோணமலை - நவரட்ணபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வயல் காணியொன்றின் மரத்தின் கீழ் விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த அகழ்வுப்பணிகள் சம்பூர் பொலிஸாரினால் பெக்கோ இயந்திரத்தைக் கொண்டு இன்று (14.10.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அகழ்வுப்பணி
இதன்போது சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் ரஜீவன் டெசீபா முன்னிலையில் இந்த அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த அகழ்வுப் பணியில் எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை என சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அகழ்வுப்பணி இடம்பெற்ற இடத்தில் விசேட அதிரடிப்படையினர் ,பொலிஸார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மூதூர் தள வைத்தியசாலையின் வைத்திய குழுவினர் உள்ளிட்ட பல பிரிவினரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam