யுத்தத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி! ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை-செய்திகளின் தொகுப்பு
யுத்தத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஜனாதிபதி அனுராதபுரத்தில் பொது நினைவுத்தூபியை ஸ்தாபிக்காவிட்டாலும் பரவாயில்லை வடக்கு மற்றும் கிழக்கில் தமது உறவுகளுக்கு மக்களை அஞ்சலி செலுத்த விடுங்கள். மக்கள் அஞ்சலி செலுத்துவதனை தடுக்க முடியாது என ஜனாதிபதியும் கூறுகின்றார்.
ஆனால் அவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு இயந்திரம் அஞ்சலி நிகழ்வுகளுக்கு தடை கேட்டு வழக்குத் தாக்கல் செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் 2024 ஆம் ஆண்டுக்கு 13 பில்லியன் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை தீர்வாக கேட்கின்றோம். நீங்கள் இராணுவத்துக்கு 13 பில்லியனை அதிகமாக ஒதுக்குகின்றீர்கள். இந்த வாரம் எமது மக்களுக்கு உணர்வு பூர்வமானது. தங்களின் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவு வாரம். அதனை தடுக்க பல வழிகளிலும் முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் தடைகோரும் மனுக்களை நீதிமன்றங்கள் நிராகரிப்பதனை நான் வரவேற்கின்றேன்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 34 நிமிடங்கள் முன்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
