மன்னன் பண்டாரவன்னியனின் 218ஆவது வெற்றி நாளில் முல்லைத்தீவில் அஞ்சலி
முல்லைத்தீவு கோட்டையை வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றி கொண்ட 218ஆம் ஆண்டு நினைவாக மன்னனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனின் முல்லைத்தீவிலுள்ள மக்கள் தொடர்பகத்தில் இன்று இந்த அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் - 19 பரவல் காரணமாக நாட்டில் அமுல்படுத்ப்பட்டுள்ள ஊரடங்கு நிலைமையால் வருடந்தோறும் பண்டாரவன்னியன் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்படும் முல்லைத்தீவு நகர்ப்பகுதிக்குச் செல்ல முடியாத நிலையில் ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் பண்டார வன்னியனின் திருவுருவ படத்துக்குச் சுடர் ஏற்றி, மலர் தூவி நினைவுகூரல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன், கரைதுரைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா - லோகேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த ஆங்கிலேயரின் கோட்டையை 1803ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் போரிட்டுக் கைப்பற்றி, இரண்டு பீரங்கிகளையும் மாவீரன் பண்டார வன்னியன் கைப்பற்றிய நாளாக இன்றைய நாள் அடையாளப்படுத்தப்பட்டு ஒவ்வொருவருடமும் நினைவேந்தல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
