மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு(Photo)
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியில் உயிரிழந்த தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது நேற்று முன் தினம் (22.07.2023) முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினரும் கட்சி உப தலைவருமான இரா. துரைரெட்ணம் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன் போது உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி உறவினர்களை கௌரவித்துள்ளனர்.
நினைவேந்தல் நிகழ்வு
ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியில் இருந்து உயிரிழந்த படுகொலை செய்யப்பட்ட தோழர்களை வருடாவருடம் நினைவு கூர்ந்து அவர்களின் உறவுகளை கௌரவிக்கும் 7வது நிகழ்வு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உப தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், இரா. துரைரெட்ணம், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி மத்தியகுழு உறப்பினர்கள் உட்பட கட்சி ஆதரவாளர்கள் உயிரிழந்தவர்களின் உறவுகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன் போது படுகொலை செய்யப்பட்ட கட்சி தலைவர் பத்மநாபா மற்றும் கஞவாஞ்சிகுடி, மண்டூர், காரைதீவு, கல்முனை, திருக்கோவில், அக்கரைப்பற்று, போன்ற வலயங்களில் உயிர் தியாகம் செய்த தியாகிகளின் உருவப்படத்திற்கு முன்னால் சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து உயிர்தியாகம் செய்த தியாகிகளின் உறவினர்களுக்கு பொன்னாடை போர்த்தி தியாகிகளின் திருவுருவ படங்கள் பொறிக்கப்பட்ட நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |







சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
