தமிழர் பகுதியில் 20 வருடங்களின் பின்னர் தந்தையின் கல்லறைக்கு சென்ற மகன்
படுகொலை செய்யப்பட்ட தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் மகனான டேவிட் பரராஜசிங்கம், தனது தந்தையின் கல்லறையில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் அவரது மகனான டேவிட் பரராஜசிங்கம் இலங்கை வருகை தந்துள்ளார்.
குறித்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் , உப முதல்வர், உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள்
எனினும், மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன் மற்றும் சிறிநாத் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
காணொளி - குமார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் தமிழ்த்தேசிய அரசியலிலும் மிகப்பெரும் ஆளுமையாக திகழ்ந்த ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு துணை ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்டார்.
20 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது மகனான டேவிட் பரராஜசிங்கம், தந்தையின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதன்போது, தமிழரசுக் கட்சியின் மாவட்ட மட்ட முக்கியஸ்தர்கள் குறித்த அஞ்சலி நிகழ்வில் பங்குபெறாமை டேவிட் பரராஜசிங்கத்தின் குடும்பத்தினருக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 10 மணி நேரம் முன்

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
