மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் - எரிந்த நிலையில் சடலம் மீட்பு
குருநாகல் பிரதேசத்தில் முடி வெட்ட சென்ற ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிந்தவர் குருநாகல், தொரட்டியாவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் ஒரு தொழிலதிபர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று மதியம் தொழிலதிபர் முடி வெட்டப் போவதாகக் கூறி ஜீப்பில் வீட்டை விட்டுச் சென்றதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
மாலை வரை அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது கையடக்க தொலைபேசியும் இயங்காமல் போயுள்ளது. இதனால் அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் கட்டம்புவ பகுதியில் கால்நடைகளை பார்க்கச் சென்ற ஒருவர், ஜீப்பில் ஒருவர் எரிந்த நிலையில் உயிரிழந்துள்ளதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதற்கமைய, மேலும் விசாரணையில், வாகனமும் அந்த நபர் காணாமல் போன தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மர்ம மரணம்
அவரது மனைவிக்கு இந்த விடயம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தில் உயிரிழந்து கிடந்தவர் தனது கணவர் என மனைவியால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மர்மான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 9 மணி நேரம் முன்

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam

மளிகைப்பொருட்கள்: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன விலை வித்தியாசம்? ஒரு வைரல் வீடியோ News Lankasri
