வடமராட்சி கிழக்கை வந்தடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தி
தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி வடமராட்சி கிழக்கை வந்தடைந்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில், திலீபன் வழியில் வருகிறோம் என்று ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி
இந்த பவனி, இன்று(22) பிற்பகல் 02.00 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை வந்தடைந்துள்ளது.

தியாக தீபம் தீலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக சென்று வருகின்ற நிலையில் வடமராட்சி கிழக்கு மக்களின் அஞ்சலிக்காக இன்றையதினம் வருகை தந்திருந்தது.
இதன்போது பொது மக்களும், அருட்தந்தையும் இணைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri