பலத்த இராணுவ கண்காணிப்புக்களுக்கு மத்தியில் மாமனிதர் ரவிராஜ் இல்லத்தில் அஞ்சலி (PHOTOS)
பலத்த இராணுவ கண்காணிப்புக்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாமனிதர் நடராஜா ரவிராஜ் இல்லத்தில் 6.05 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சி.சிவநேசன் ஆகியோர் தீபம் ஏற்றி அஞ்சலி செய்துள்ளனர்.
குறித்த அஞ்சலி நிகழ்வில் பிரதான ஈகைச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரன் சிவஞானம் சிவநேசன் ஏற்றி வைத்துள்ளார். இதனையடுத்து இராணுவத்தினர், பொலிஸார், மற்றும் இராணுவ புலனாய்வாளர்களும் ரவிராஜின் வீட்டை சுற்றிவளைத்து வீட்டுக்குள் நுழைந்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தியவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடை செய்யப்பட்ட நினைவுச் சின்னங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்களா என்று விசாரணை பின்னரே இராணுவத்தினர் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்- பகீர் தகவல் கூறிய சீரியல் நடிகை மோனிஷா Cineulagam
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan