சர்ச்சையில் சிக்கிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் வெளியான தகவல்
சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ பண மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு மத்தியில் சிங்கப்பூரில் இருந்து இங்கிலாந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான பதிவில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த பதிவில், ஜெரோம் பெர்னாண்டோ, ஜூலை 06 முதல் வியாழக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் ஊழியம் செய்வார்” என்று குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்துக்கள்
பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதத்திற்கு எதிராக அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து குற்றப்புலனாய்வுத்துறை விசாரணையைத் தொடங்கிய நிலையில், கடந்த மே 16 ஆம் திகதி அவர் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றிருந்தார்.
இதனை தொடர்ந்து, ஜெரோம் பெர்னாண்டோ தனது கருத்துக்களால் பௌத்தம், இந்து மதம் மற்றும் இஸ்லாம் மக்களுக்கு ஏற்பட்ட மன வருத்தத்திற்கு காாணொளி மூலம் மன்னிப்பு கோரியிருந்தார்.
இதன் பின்னர் அவர் இலங்கை பயணத்தை தவிர்த்திருந்ததுடன், ஜூன் 2 ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மாத்திரம் இலங்கைக்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய்யை நெருங்கிய நபரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர் - விமான நிலையத்தில் பரபரப்பு News Lankasri
