பல மாதங்கள் ஆனாலும் போராட தயார்: ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் சூளுரை
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களாகத் தொடர்ந்துவரும் நிலையில், ஹமாஸை தோற்கடிக்க பல மாதங்களானாலும் போராட தயார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் - இஸ்ரேலில் அத்துமீறி தாக்குதலை நடத்தினர்.
இதில் 1200ற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகினர். 240 பேரை பிணைக்கைதிகளாகக் கடத்தி செல்லப்பட்டனர்.
சஜித்துடனான சந்திப்பில் புலம்பெயர் தமிழர் அமைப்பின் அடையாள மாற்றம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
தரைவழி தாக்குதல்
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது வான்வழி தாக்குதலை ஆரம்பித்ததோடு தரைவழி தாக்குதலாக விரிவுப்படுத்தி உள்ளது.
இதில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 17,700யை கடந்துள்ளதாகவும் இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசாவின் மக்கள் தொகையில் 90 சதவிகிதத்தினர் இடப்பெயர்வுக்கு ஆளாகி இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் போர் பிரகடனம் செய்து காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஹமாஸ்க்கு எதிரான தாக்குதல்
இந்த நிலையில் இஸ்ரேல் இராணுவ அதிகாரி யோவ் காலன்ட் கூறியதாவது,
“காசாவில் ஹமாஸ்க்கு எதிரான போர், எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் முடிவுக்கு வரும்.
காசாவின் வடக்கு முனையில் ஹமாஸின் ஜபாலியா, ஷெஜையா பட்டாலியன் அகற்றப்படும் தருவாயில் உள்ளது.
நாங்கள் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து நெருக்கடி கொடுத்தால், அங்கிருந்து பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்படும் என நம்புகிறேன்.
அப்படி அவர்கள் தெரிவித்தால், அதுகுறித்து நாங்கள் யோசிப்போம். கடந்த சில நாட்களாக ஹமாஸ் அமைப்பினர் சரணடைந்துள்ளனர்.
யாரெல்லாம் சரணடைகிறார்களோ அவர்கள் உயிர்கள் காக்கப்படும். இதன்படி ஹமாஸின் உயர்நிலை அதிகாரிகள் சரணடைய வேண்டும், அல்லது உயிரை தியாகம் செய்ய வேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |