கடைசி கட்டத்தில் முதன்மை மெய்ப்பாதுகாவலரால் பாதுகாக்கப்பட்ட துவாரகாவின் இறுதி நிமிடங்கள்! (video)
இறுதி சமரில் சாதாரண போராளியாக தளபதி துர்காவிடம் ஒப்படைக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மையான மெய்ப்பாதுகாவலரால் பாதுகாக்கப்பட்டு இறுதியில் செல் அடிப்பட்டு வீர மரணமடைந்த புனித போராளி துவாரகா என அருட்தந்தை ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் துவாரகா உயிர் தப்பியிருந்தாலும் கூட கார்த்திகை 27 ஆம் திகதி போலி மாவீரர் தின உரையுடன் 37 இடங்களில் வெட்டப்பட்டு எழுதப்பட்ட அறிக்கையுடன் தேசிய தலைவரின் மகள் ஒருபோதும் உலகிற்கு அறிமுகமாக வாய்ப்பில்லை.
துவாரகா என்ற பெண் கடைசி கட்டத்தில் முதன்மை மெய்ப்பாதுகாவலரால் பாதுகாக்கப்பட்டு வீர மரணமடைந்த புனித போராளி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாவீரர் தினத்தன்று வெளிவந்த காணொளி தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,