இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய நடவடிக்கை: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 15 இந்திய கடற்றொழிலாளருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று, அதனை 05 வருட காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட போது, கடந்த (09.07.2023)ஆம் திகதி இந்திய கடற்றொழிலாளர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அன்றைய தினமே நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டமையை அடுத்து, அவர்களை இன்றைய தினம் (21.07.2023) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டு இருந்தார்.
உரிமை கோரிக்கை வழக்கு
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, 15 பேரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதன்போது 15 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்து ஊர்காவற்துறை நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.
கடற்றொழிலாளர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகு தொடர்பான உரிமை கோரிக்கை வழக்கு விசாரணையை (04.08.2023) ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

முடிவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சன் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
