யாழ். போதனா வைத்தியசாலை முன்புறமாக காணப்படுகின்ற வீதியிலல் மர நடுகை
யாழ். போதனா வைத்தியசாலை, யாழ் மாநகர சபை, மற்றும் Green Layer சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்றாக இணைந்து வைத்தியசாலை முன்புறமாக காணப்படுகின்ற வீதியின் நடுப்பகுதியில் மரங்கள் நாட்டப்பட்டடுள்ளன.
வைத்தியசாலை வீதியானது பொது மக்களின் அதிகரித்த பாவனையில் உள்ள சன நெரிசலான பகுதியாகும்.
தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியின் ஊடாக நடந்தும் ஏனைய வாகன வசதியினூடாக பயணிக்கின்றார்கள்.
வைத்தியசாலை வீதி
எனவே இப்பகுதி கடுமையான வெயில், வெப்பம் மற்றும் புறக் காரணிகளால் அவர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகின்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை யாழ். மாநகர சபை, மற்றும் Green Layer சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்றாக இணைந்து இன்று வீதியின் நடப்பகுதியில் பொருத்தமான குழிகளை வெட்டி தேவையான உரம் கலந்த மண்ணை இட்டு பாதுகாப்பாக வளரக்கூடிய வகையில் உயர்ந்து வளரக்கூடிய நிழல் மரங்கள் நட்டு வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.