கடல் அட்டைகளை பிடித்த மூவர் கடற்படையினரால் கைது(Photos)
வடமராட்சி - கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக அட்டைகளை பிடித்த மூவர் வெற்றிலைக்கேணி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் மன்னாரை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடமைகளுடன் மூவரும் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது நடவடிக்கை
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இரவு நேரத்தில் பல படகுகள் சட்டவிரோதமாக அட்டை பிடிப்பதாக கடற்படையினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆயினும் பல படகுகள் தடை செய்யப்பட்ட அட்டை தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
