கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் முறிந்து விழுந்துள்ள பாரிய மரம்
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததால் இன்று பிற்பகல் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மரம் விழுந்ததன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எனவே ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியை பயன்படுத்துவோர் கொட்டகலை முதல் போஹாவத்தை வரையான மாற்று வீதியை தோட்ட பாதையின் ஊடாக பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
வீதியின் நடுவே விழுந்த மரத்தில் காணப்பட்ட பல குளவி கூடுகள் கலைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
திம்புள்ள பத்தனை பொலிஸ் அதிகாரிகளும், கொட்டகலை பிரதேச சபையினரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் இணைந்து மரத்தை பாதையிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.