அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ட்ராவிஸின் பனியில் கை விரல் கொண்டாட்டம்!
மெல்போர்ன் டெஸ்டில், பகுதி நேர பந்துவீச்சாளராக செயற்பட்ட அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் டிராவிஸ் ஹெட், தமது பந்துவீச்சில், இந்தியாவின் ரிசப் பன்ட் ஆட்டமிழந்த நிலையில், விசித்தரமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்ந்தும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
சிலர், அவரின் செயலை வினோதமானது என்று பாராட்டியுள்ளனர். எனினும் ஏனையவர்கள் அந்த செயலின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
விசித்தரமான கொண்டாட்டம்
இருப்பினும், போட்டிக்குப் பின்னர், ட்ராவிஸ் ஹெட், தமது கொண்டாட்டத்தை அர்த்தத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
தாம், அந்த பிங்கர் ஒன் தி ஐஸ் என்ற கொண்டாட்டத்தை இலங்கையில் தொடங்கியதாகவும், பனியில் தமது கை விரலை வைத்து, தாம், அடுத்ததற்கு செல்ல தயாராக இருப்பதை குறிப்பதற்காகவே அவ்வாறு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் பந்துவீசுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இந்தநிலையில், இலங்கையின் காலியில் தமது அடுத்த பந்துவீச்சு இருக்கும் என்று நினைத்தேன். அடுத்து அங்கு செல்லத் தயாராக இருக்கிறேன். எனவேதான் நான் அதை ஒரு சிறிய கோப்பை பனியில் போட்டேன் என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார்.
சைகை
இதேவேளை போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர், சந்திப்பின் போது அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்ஸம் இந்த சைகை தொடர்பில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
ட்ராவிஸ், தமது கை விரல் மிகவும் சூடாக இருப்பதால், அதனை, ஒரு கோப்பை பனியின் போடப் போகிறார் என்பதே அந்த சைகையின் அர்த்தம் என்று கம்மின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ட்ராவிஸின் இந்த செயல், பொருத்தமற்றது என்று குறிப்பிட்டுள்ள இந்தியாவின் முன்னாள் கிரிக்கட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, இதற்காக ட்ராவிஸ_க்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்திடம் கோரியுள்ளார்.