மருதங்கேணி பருத்தித்துறை வீதியால் செல்பவர்கள் அவதானம்-விபத்துக்கள் ஏற்படக்கூடிய ஆபத்து..!
யாழ்ப்பாணம்(Jaffna) வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் அம்பன் பகுதியில் சுமார் 200m வரை கொட்டப்பட்ட மணல் மண்ணினால் பயணிகள் விபத்துக்குள்ளாகும் ஆபத்தான நிலை காணப்படுகிறது.
குறித்த காப்பேற் வீதியால் பயணம் செய்யும் வேளை குறித்த மணல் பகுதியை கடந்து செல்லும் போது இரு சக்கர வாகனங்கள் சறுக்கல் நிலை ஏற்பட்டு விபத்துக்குட்படக்கூடிய மிகவும் ஆபத்தான நிலை காணப்படுகின்றது.
சட்டவிரோதமாக மணல் கடத்தல்
நேற்று (19) தொடக்கம் குறித்த பகுதியில் வீதியில் மணல் கொட்டப்பட்டு பரப்பப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இது எவ்வாறு,எப்படி கொட்டப்பட்டது என்பது தொடர்பாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.
சட்டவிரோதமாக மணல் கடத்தல் காரர்கள் மணல் மண்ணை ஏற்றிச் செல்லும் போது நடவடிக்கை டுக்க வேண்டிய தரப்புக்களால் துரத்திச் சென்றவேளை வீதியில் கடத்தல்காரர்கள் மணலை கொட்டி விட்டு தப்பிச் சென்றிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.
ஆபத்தான நிலை
எது எவ்வாறு இருந்தாலும் குறித்த மணல் மண் வீதியில் கொட்டப்பட்டதை அகற்றுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையோ, பருத்தித்துறை பிரதேச சபையோ, அல்லது மருதங்கேணி பொலிசாரோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பகல் வேளைகளில் ஒரளவு வாகனங்களை செலுத்தக் கூடிய நிலை இருந்தாலும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பது மிக மிக ஆபத்தான பயணமாகவே இருக்க போகின்றது.
இதனால் சற்றேனும் கவனயீனமாக பயணிக்க கூடிய ஒருவர் குறித்த வீதியில் விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையை அடையக் கூடிய நிலமை காணப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 15 மணி நேரம் முன்

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம் Cineulagam

அடிக்கடி வரும் உடல்நலப் பிரச்சனை, டாக்டர் கூறியதை கேட்டு ஷாக்கான ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ Cineulagam
