ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக மனு
அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான உச்ச நீதிமன்றில் ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் சட்ட மா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
மிக நீண்ட நாட்களாக அமுல்படுத்தப்படாதிருந்த ஊழல் எதிர்ப்பு சட்டம் அமுல்படுத்தப்படுவதனை வரவேற்பதாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் உத்தேச சட்ட மூலத்தில் சில விடயங்கள் தொடர்பில் உடன்பாடல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சட்ட மூலமானது அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துச் சுதந்திரம், தகவல் அறியும் சட்டம், குற்றங்களை வெளிக்கொணர்தல் போன்றவற்றுக்கு சவால் விடுக்கும் பல்வேறு சரத்துக்கள் இந்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் தகவல் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கூறுதல் போன்றற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
