உருமாறிய 5 கோவிட் வைரஸ் திரிபுகள் இலங்கையில் பரவுகிறதா என சந்தேகம்
உலகில் பல நாடுகளில் பரவி வரும் உருமாறிய 5 கோவிட் வைரஸின் திரிபுகள் இலங்கையில் பரவி வருகிறதா என்பதை கண்டறிய பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த உருமாறிய கோவிட் திரிபுகளை கண்டறிவதற்காக விசேட உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
உலகில் தற்போது பரவி வரும் உருமாறிய கோவிட் வைரஸ் திரிபுகளை அடையாளம் காண்பதே இந்த பரிசோதனையின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பரிசோதனைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், மற்றைய பரிசோதனைகளை விட இதற்கு மேலதிகமாக 500 ரூபாய் செலவாகும் எனவும் ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
