வடமாகாணத்தில் முதன் முறையாக பூப்பந்தாட்ட பயிற்சியாளர்களிற்கான பயிற்சி முகாம்
வடமாகாணத்தில் முதன் முறையாக பூப்பந்தாட்ட பயிற்சியாளர் தரம் ஒன்றிற்கான பயிற்சி முகாம் இடம்பெற்று வருகின்றது.
குறித்த பயிற்சி முகாம் இன்றையதினம் (12) வவுனியா, ஓமந்தை உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
பூப்பந்தாட்ட பயிற்சி முகாமானது நான்கு நாட்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயிற்சி முகாம்
இந்தப் பயிற்சி முகாமானது வவுனியா மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில், இலங்கை பூப்பந்தாட்ட பயிற்சி மேம்பாட்டு சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது இலங்கை பூப்பந்தாட்ட பயிற்சி மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் புத்திக்க டி செல்வா, வடமாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் இணைப்பாளர் தே.கமலன், ஓமந்தை விளையாட்டு மைதான இணைப்பாளர் தனுராஜ், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வடமாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கொழும்புக்கு வெளியே முதன்முறையாக இடம்பெறும் இப்பயிற்சி முகாமில் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்து பயிற்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
