எரிபொருள் தட்டுப்பாடு: அபாயகரமாக மாறிய மக்களின் புகையிரத பயணம்(Video)
நாட்டில் நிலவும் பெரும் பிரச்சினையாக எரிபொருள் தட்டுப்பாடு மாறியுள்ளது.
எரிபொருளின்மை என்ற விடயம் மக்களின் அன்றாட வாழ்வில் பல வழிகளில் தாக்கம் செலுத்துகின்றது.
எரிபொருள் தட்டுப்பாடு
தமது செலவை குறைப்பதற்காகவும் எரிபொருள் வரிசையில் நிற்பதற்கு நேரமின்மையாலும் பொது மக்கள் தற்போது அதிகமாக பொது போக்குவரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
இதற்கமைய இன்றைய தினம் தெமட்டகொடை,உனுப்பிட்டிய ,மருதானை ,புறக்கோடடை போன்ற இடங்களில் மக்கள் புகையிரதத்தின் மிதிப்பலகையில் நின்று பயணிக்கும் அபாயகரமான நிலை ஏட்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டால் பெரும்பாலான பகுதிகளில் பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதனால் மக்கள் அதிகமாக புகையிரதத்தில் பயணிக்க ஆரம்பித்துவிட்ட்னர்.
மக்களின் தேவை கருதி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி செல்லும் நிலையில் புகையிரத சேவைகள் உள்ளன.
இதனாலே அபாயகரமான முறையில் பயணிக்கும் நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.



