“தயிர்” வாங்கி வந்தமையால் வேலையை இழந்த புகையிரத ஓட்டுநர்
நிறுத்தப்படக்கூடாத இடம் ஒன்றில் புகையிரதத்தை நிறுத்தி விட்டு, தயிர் வாங்கி வந்த புகையிரத ஓட்டுநர் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து தென் கராச்சியை நோக்கி கடுகதி புகையிரதம் ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது.
குறித்த புகையிரத ஓட்டுநர் எந்தவித அறிவிப்புமின்றி திட்டமிடப்படாத ஒரு இடத்தில் புகையிரதத்தை நிறுத்தி விட்டு, தயிர் பாக்கெட் வாங்கி வந்துள்ளார்.
அத்துடன் தயிர் வாங்கிய பின்னர் அலட்சியமாக நடந்து வந்து மீண்டும் புகையிரதத்தை இயக்கி உள்ளார்.
இந்த நிகழ்வை புகையிரதத்தில் இருந்த சிலர் காணொளியாக படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த காணொளியை பாகிஸ்தானின் புகையிரத துறை அமைச்சர் அசாம் கான் பார்த்துவிட்டு, குறித்த புகையிரத ஒட்டுநரை பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதேவேளை பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அரிதான விஷயம் அல்ல என்று புகையிரத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.