வழமைக்கு திரும்பிய மலையக தொடருந்து சேவை
உடுவர பிரதேசத்தில் தொடருந்து பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக தடைப்பட்ட பதுளை - தெமோதரை இடையேயான தொடருந்து சேவை இன்று (2) காலை முதல் வழமை போல் இயங்குமென நாவலப்பிட்டி தொடருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டை - பதுளை வரையிலான தொடருந்து இன்று (2) முதல் வழமை போன்று இயங்கும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
எல்ல வரையிலான தொடருந்து சேவை
கடந்த சில தினங்களாக பதுளை பிரதேசத்தில் பெய்த அடை மழை காரணமாக கடந்த 25ஆம் திகதி காலை உடுல்லை தொடருந்து பாதையின் உடுவர கனுவ பகுதியில் உள்ள தொடருந்து பாதையில் பாரிய மண் மேடு சரிந்து விழுந்தது.
இதனால் கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா, பண்டாரவளை மற்றும் எல்ல வரையிலான தொடருந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |