இலங்கையில் தொடருந்தினால் ஏற்படும் உயிரிழப்பு வீதம் அதிகரிப்பு
கடந்த நான்கு மாதங்களில், 42 பேர் தொடருந்து விபத்துகளில் சிக்கியும் தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் தொடருந்து விபத்தில் 84 பேர் காயமடைந்ததாகவும் திணைக்களம் குறிப்பிடுகிறது.
கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் விபத்துக்கள் மற்றும் தற்கொலைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொடருந்து மேம்பாட்டிற்கான தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு
கடந்த 2022ஆம் ஆண்டு தொடருந்து மோதி விபத்துகளில் சிக்கி 135 பேர் உயிரிழந்துள்ளதுடன் 254 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், 2023ஆம் ஆண்டு தொடருந்து மோதியதில் 148 பேர் உயிரிழந்துள்ளதுடன் 248 பேர் காயமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
