தென்னிலங்கையில் இயர்போனால் இளைஞனுக்கு நேர்ந்த கதி
பேருவளை - மரக்கலவத்தை பகுதியில் கையடக்கத் தொலைபேசியில் இயர்போன் இணைக்கப்பட்டு தொடருந்து பாதையின் குறுக்கே பயணித்த இளைஞன் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி 20 வயதுடைய இளைஞன் ஒருவர் தொடருந்தில் மோதி படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் சுவசெரிய அம்பியுலன்ஸ் வண்டியின் உதவியின் மூலம் களுத்துறை - நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.
விரைவு தொடருந்து
விபத்துக்குள்ளானவர் பேருவளை - மல்லபொக்க பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் என பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு - மருதானையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த விரைவு தொடருந்தில் இந்த இளைஞன் மோதியுள்ளார்.
இளைஞன் தனது தந்தையுடன் முச்சக்கரவண்டியில் பேருவளை நகருக்கு சென்றுள்ளார்.
அங்கு தனது பணிகளை முடித்துக்கொண்டு மரக்கலவத்தை பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது தொடருந்தில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
