மூதூரில் சோகம் : நீர் நிரம்பிய பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்த குழந்தை
மூதூர், ஷாபி நகர் பகுதியில் நேற்று (05.01.2026) இடம்பெற்ற துயரச் சம்பவமொன்றில், ஒரு வயது எட்டு மாதங்கள் மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த "ஆலியா" என்ற குழந்தையே இவ்வாறு நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.
சீரற்ற வானிலை மற்றும் மழையினால்
வீட்டின் அருகே தோண்டப்பட்டிருந்த நீர் நிரம்பிய பள்ளத்தில், விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் நடந்த உடனேயே குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரியவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் மழையினால் குடியிருப்புப் பகுதிகளில் நீர் நிலைகள் மற்றும் பள்ளங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
எனவே, சிறு பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள், குழந்தைகளை தனியாக விடாமல் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |