தலையில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட நிலையில் குடும்பப் பெண் உயிரிழப்பு
காய்ச்சல் என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் தலையில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட நிலையில் நேற்றையதினம் (16) உயிரிழந்துள்ளார்.
சிறுப்பிட்டி மத்தி, நீர்வேலி பகுதியை சேர்ந்த கணேஸ்வரன் திகழ்மதி (வயது 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு கடந்த 14ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்றையதினமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு மூளையில் இரத்த கட்டி உள்ள விடயம் தெரியவந்த நிலையில் 15ஆம் திகதி சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (16) உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
