லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து நடத்துனர் ஒருவருக்கு நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
லண்டனில் இருந்து யாழ். வந்த 27 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்றையதினம் நயினாதீவு செல்வதற்காக அரச பேருந்து ஒன்றில் குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளார்.
பேருந்து நடத்துனர்
இதன்போது பேருந்து நடத்துனர் குறித்த பெண்ணுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரன தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து செயற்பட்டு குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், நீதிமன்ற குற்றப்பணமாக 1500 ரூபா அறவிடப்பட்டதுடன், குறித்த பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்பதுடன் ஒத்திவைக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |