இராணுவ புலனாய்வு பிரிவினரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர்கள்(Photos)
சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்தியவர்கள்,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வானை நிறுத்திவிட்டு பீடி இலைகளை கைவிட்ட நிலையில் தப்பியோடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
புத்தளம் கற்பிட்டி பகுதியிலிலுருந்து பீடி இலைகளை வானில் கடத்தி செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கமைய சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து படகு மூலம் கடத்தல்
இதன்போது வானில் மறைத்து வைத்திருந்த 630 கிலோ கிராம் பீடி இலைகள்,கற்பிட்டி பாலக்குடா பகுதியில் நேற்று இரவு கைப்பற்றப்பட்டதாக இராணுவ புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பீடி இலைகள் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து படகு மூலம் கொண்டிருக்கலாமென தாம் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வானையும்
கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக இராணுவ புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.







சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
