நுவரெலியாவில் அதிகரிக்கும் போக்குவரத்து விதிமீறல்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நுவரெலியாவிற்கு சுற்றுலா நிமிர்த்தம் வரும் பேருந்துக்களின் போக்குவரத்து விதிமீறல்களால் ஏற்படும் அதிக ஒலி, ஒளி காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் நுவரெலியா கிரகரி வாவிக் கரையோரம் உள்ளிட்ட சில சுற்றுலா பிரசித்திப்பெற்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகைத்தரும் பேருந்துக்கள் தற்கால சூழ்நிலைக்கேற்ப நவீன வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு,விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களைக் கொண்டு பலநிறங்களில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
போக்குவரத்து விதிமீறல்
அதிரும் அதிகச் சத்தமாக பாடல்களை ஒலிபரப்பப்பட்டு தங்களுடைய பொழுதுகளை கழிக்கின்றனர். இதில் அதிக ஓசையை எழுப்பக்கூடிய ஒலி எழுப்பிகளை ( ஹோர்ன்கள் Horn) பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து பொலிஸாரோ அல்லது போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த பேருந்துக்களில் அதிக வெளிச்சத்தை உமிழும் திறன் வாய்ந்த பரவலாக ஒளி பரப்பும் நவீன (எல்.இ.டி) மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா நகரின் மையப் பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான விளக்குகளுடன் ஒளியை பரப்பிச் செல்லும் இவ்வாறான பேருந்துக்களால் எதிரே வரும் வாகன சாரதிகளின் கண்களுக்கு கூச்சத்தை ஏற்படுத்துகின்றன.
கோரிக்கை
பிரதான வீதிகளில் திடீரென ஒலிக்கப்படும் இந்த வகை ஒலி எழுப்பிகள் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன, இவ்வாறான செயற்பாடு காரணமாக ஏனைய வாகன சாரதிகள் மட்டுமின்றி, பாதசாரிகளுக்கும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன.
மேலும் இவ்வாறான அதிக ஒலி செவிகளில் துன்புறுத்தக் கூடிய இரைச்சலாக மாறுகிறது. இது காதுகளில் ஏற்படும் நோய்களுக்கு அதிக வலியை உண்டாக்கும் அனுபவத்தை அதிகரிக்கிறது.
எனவே பேருந்துக்களில் விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றி முன் மற்றும் பின் பக்கங்களில் பொருத்தக்கூடிய சமிஞ்சை மின்விளக்குகளுக்கு மேலதிகமாக பொருத்தப்பட்டுள்ள மின்குமிழ்களை அகற்றவும் அதிகம் சத்தம் கூடிய ஒலி அமைப்புக்களை குறைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



