உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி
மன்னார் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரியொருவரின் துரித நடவடிக்கையின் காரணமாக மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பெண் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(29.09.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
பொலிஸ் சார்ஜன்ட்
மன்னார் நகருக்குள் நுழையும் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்தில் பிரதேச போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் சார்ஜன்ட் மலலசேகர பணிபுரிந்து கொண்டிருந்த போது பெண் ஒருவர் கையில் கடிதம் போன்ற ஒன்றை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.
பின்னர் குறித்த யுவதி குறித்த பொலிஸ் அதிகாரியிடம் தமிழ் தெரியுமா? என கேட்டுள்ளார்.
அதற்கு சார்ஜன்ட் நீங்கள் யார் என்று தமிழில் கேட்க அந்தப் பெண், தன் கையில் இருந்த கடிதம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை சார்ஜென்ட்டின் மேசையில் வைத்துவிட்டு மன்னார் பாலம் நோக்கி ஓடியுள்ளார்.
சம்பவத்தை அவதானித்த பொலிஸ் சார்ஜன்ட் மலலசேகரன், குறித்த பெண் உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக சந்தேகித்து துரத்திச் சென்றுள்ளார்.
மீட்கப்பட்ட பெண்
அப்போது குறித்த பெண் பாலத்தின் பாதுகாப்பு சுவரில் ஏறி கடலில் குதிக்க தயாராகியுள்ளார்.
அந்தப் பெண் பாலத்தில் குதிக்கத் தயாரான நிலையில் மலலசேகர அந்தப் பெண்ணின் காலை பிடித்துக் காப்பாற்றினார்.
இவ்வாறு சார்ஜன்டினால் மீட்கப்பட்ட 24 வயதுடைய பெண் மன்னார் பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
