அம்பாறையில் ஏற்பட்ட சிறு விபத்து: 1 கிலோ மீட்டர் தூரம் வரை வாகன நெரிசல்
அம்பாறை மாவடிப்பள்ளி பாலத்தடியில் ஏற்பட்ட சிறு விபத்து காரணமாக சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசலொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து நேற்றையதினம்(01.04.2025) இரவு இடம்பெற்றுள்ளது.
காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஒடுங்கிய பாலம் உள்ள பகுதியில் நேருக்கு நேர் பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சிதைவடைந்துள்ள பாலம்
இதனால், குறித்த பாலத்தில் இரு வாகனங்களும் சிக்கிக்கொண்டதுடன் அம்பாறையில் இருந்து கல்முனை அக்கரைப்பற்று நோக்கி சென்ற வாகனங்களும் கல்முனை அக்கரைப்பற்று பகுதியில் இருந்து அம்பாறை நோக்கி மாவடிப்பள்ளி ஊடாக செல்ல முற்பட்ட வாகனங்களும் போக்குவரத்து செய்ய முடியாமல் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை தரித்து நின்றன.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த காரைதீவு பொலிஸார் உள்ளிட்ட உரிய அதிகாரிகள் குறித்த விடயங்களை சீராக்கியுள்ளனர்.
இதேவேளை, பல ஆண்டு காலமாக மாவடிப்பள்ளி ஒடுங்கிய பாலமானது காணப்படுவதுடன் தற்போது அது உடைந்து சிதைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 3 நாட்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
