மத்திய கிழக்கில் போர் பதற்றம்! ஹோர்முஸ் நீரிணையில் ஸ்தம்பித்துள்ள கப்பல் போக்குவரத்து
GMT நேரம் மதியம் 12:00 மணிக்கு (BST 13:00) முன்பாக எடுக்கப்பட்ட Marine Traffic இணையதளத்தின் காட்சிப்படத்தின் படி, ஹோர்முஸ் நீரிணையில் எந்தக் கப்பல் போக்குவரத்தும் நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) சுமார் 20 சதவீதம் வழக்கமாக இந்த நீரிணை வழியாகவே செல்கிறது.
நீங்கள்தான் அனுமதி அளித்தீர்கள்.! ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச் சூடு - இந்திய கப்பலில் இருந்து வந்த அவசர ஒலி
ஹோர்முஸ் நீரிணை
ஆனால் மத்திய கிழக்கில் அண்மையில் அதிகரித்துள்ள பதற்றம் காரணமாக, இந்த வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் வணிகக் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டதாக அறிவித்திருந்தார். எனினும், இந்த முடிவு ஒரு நாளுக்குள் மாற்றப்பட்டது.
தற்போது,ஈரானிய துறைமுகங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடையை (blockade) நீக்கும் வரை, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும் என ஈரான் தெரிவித்துள்ளது.