நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியின் நானுஓயா பகுதியில் மண் சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து ஒரு வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று (03) அதிகாலை குறித்த அனர்த்தம் ஏற்பட்ட நிலையில் தற்போது அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகிறது.
விழிப்பாகவே இருக்க
எவ்வாறாயினும் தற்போது வாகனங்கள் தங்குதடையின்றி பயணிக்க கூடிய நிலை காணப்பட்டாலும் காலை மற்றும் மாலை நேரத்தில் இப்பகுதியில் அதிக பனிமூட்டம் நிறைந்த வானிலை காணப்படுவதினால் நுவரெலியா, தலவாக்கலை, ஹட்டன் மற்றும் மெராயா வழியூடாக டயகமவுக்கான போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலையினால் மண்சரி ஏற்பட்டுள்ளதுடன் இப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவுக்கான அறிகுறியாக அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என நானுஓயா பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த 15 திரைப்படங்கள்.. அதில் தமிழ் படங்கள் எத்தனை தெரியுமா? லிஸ்ட் இதோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
