யாழில் வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த மரத்தால் தடைப்பட்ட போக்குவரத்து
யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் மரமொன்று வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.
நேற்றிரவு மழையுடன் வீசிய காற்று காரணமாக இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
இதனால் மின்கம்பமும் சேதமடைந்த நிலையில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம்
அத்துடன் அராலி பகுதியில் 5 வீடுகளுக்குள் வெள்ளமும் புகுந்துள்ளது.
இந்நிலையில் விரைந்து செயற்பட்ட வலிகாமம் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் ச.ஜயந்தன் தலைமையிலான குழுவினர், வீதிக்கு குறுக்காக முறிந்து விழுந்த மரத்தை வெட்டி போக்குவரத்தை சீர்ப்படுத்தியுள்ளனர்.
மக்கள் பணத்தில் பிறந்தநாள் கொண்டாடியுள்ள நாமல்! அம்பலமாகியுள்ள ராஜபக்சர்களின் சித்து விளையாட்டுக்கள்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள்
அத்துடன் அராலி பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்றும் பணியிலும் அந்த குழுவினர் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பொது இடம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டதாக வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தெரிவித்துள்ளார்.






