முச்சக்கர வண்டிகள் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கை
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால், அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால் மாத்திரமே முச்சக்கர வண்டிகளில் மாற்றங்கள் மற்றும் அலங்காரங்கள் அனுமதிக்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கான உதவி பொலிஸ் அதிபர் இந்திக்க ஹபுகொட இதனை தெரிவித்துள்ளார்.
பதிவுப் புத்தகம்
முச்சக்கர வண்டியில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அது வாகனத்தின் பதிவுப் புத்தகத்தில் அதன் அசல் மாதிரியை மாற்றாமல் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
முச்சக்கர வண்டி சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, 2023 ஜூலை 7ஆம் திகதி முதல் முச்சக்கர வண்டிகளில் குறிப்பிட்ட மாற்றங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அங்கீகரித்து வருவதாக டி.ஐ.ஜி ஹபுகொட குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சைரன்கள், வர்ண விளக்குகள், அதிக ஒலி எழுப்பும் ஹோர்ன்கள் மற்றும் சட்டவிரோதமாகக் கருதப்படும் பிற மாற்றங்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத பாகங்களை அகற்றுவதற்காக, ஓட்டுநர்களுக்கு 2025 ஜனவரி 19ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |