மின் தடையின் எதிரொலி! கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்
இலங்கையின் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென மின்சார தடை ஏற்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்ட மின் விநியோக தடை காரணமாக போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் இயங்காமையே குறித்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் தற்போது மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கலை சீர்செய்ய இன்னும் மூன்று மணித்தியாலங்கள் தேவை என்று மின்சார சபையின் முகாமையாளர் அறிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று முற்பகல் முதல் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
இந்த தடைக்கு மின்சார விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பே காரணம் என்று மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளில் திடீர் மின்சார தடை
இலங்கைக்கு மின்சாரம் எப்போது வழமைக்கு திரும்பும் : சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
