கிளிநொச்சியில் கட்டாகாலி கால்நடைகளால் வீதி போக்குவரத்து பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ-35 பிரதான வீதியில் புளியம்பொக்கனை தருமபுரம் விசுவமடு உடையார் கட்டு ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் கால்நடைகளின் நடமாட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதான வீதிகளில் கால்நடைகள் நடமாடி திரிவது மற்றும் படுத்துறங்குவதன் காரணமாக இவ்வீதி ஊடாக போக்குவரத்தை மேற்கொள்ளும் சாரதிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
கால்நடை உரிமையாளர்களின் கவனயீன குறைவு காரணமாக உயிராபத்து ஏற்படக்கூடிய நிலையிலும் பொருட்சேதங்கள் ஏற்படும் நிலையிலும் இவ்வீதி ஊடாக பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
உடன் நடவடிக்கை
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் இதுவரை காலமும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பலர் காயமடைந்துள்ளதுடன் பல கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |