எமது பாரம்பரிய காணியை பாதிரியாருக்கு தாரைவாக்க முயற்சி - பிரதேச விவசாய அமைப்புகள் குற்றச்சாட்டு
மடுவில் உள்ள எமது பாரம்பரிய விவசாயக் காணியை
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் பாதிரியாருக்கு வழங்குவதற்கு முயற்சி செய்வதாக பிரதேச விவசாய அமைப்புகள்
குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளன.
ஆனைப்பந்தி வீதியில் அமைந்துள்ள வட மாகாண விவசாய அமைச்சின் தலைமை அலுவலகத்துக்கு முன் நேற்று (01.11.2022) இடம் பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,
சுமார் 30 வருடங்களுக்கு மேலாக குறித்த பிரதேசத்தில் உள்ள அரச காணியில்
விவசாயம் செய்து வருகிறோம்.
மக்களின் காணியை அபரிக்க முயலும் பாதிரியார்
குறித்த காணியை பாதிரியார் ஒருவர் தமக்குரிய காணி என எவ்விதமான ஆதாரங்களும் இல்லாமல் கூட்டத் தீர்மானம் எனக் கூறி அபகரிக்க முயலுகிறார். இது தொடர்பில் அப்போதைய வடக்கு மாகாண ஆளுநராக இருந்த பி.எச்.எம்.சார்ள்சிடம் முறைப்பாடு செய்தோம்.
அதன் பயனாக குறித்த காணியில் ஒரு ஏக்கரை விவசாயம் செய்வதற்கு வழங்குவதோடு குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட விவசாயம் செய்ய ஆர்வமுள்ள குடும்பம் ஒன்றுக்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்குமாறு சிபாரிசு செய்தார் .
ஆனால் ஆளுநர் வழங்கிய பணிபுரையை அரச அதிபர் நடைமுறைப்படுத்தாது புறந்தள்ளி வருகிறார்.
விவசாய காணிக்கு உரிமைக் கொண்டாடும் பாதிரியார்
குறித்த காணி சுமார் 70 ஏக்கர் வரை காணப்படுகின்ற நிலையில் சுமார் 58 ஏக்கர் வரை சுமார் 40குடும்பங்களுக்கு மேல் விவசாயம் செய்து வருகிறோம். காணிப் பிணக்குகளை தீர்ப்பதாக எம்மை அழைத்த மன்னார் அரச அதிபர் இந்த காணிக்கு உரிமை கொண்டாடும் பாதிரியாரையும் கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார்.
குறித்த கூட்டத்தில் நாம் விவசாயம் செய்து வரும் காணியை ஒரு குடும்பத்துக்கு இரண்டு ஏக்கர் வீதம் பகிந்து தாருங்கள் அல்லது ஆளுநர் வழங்கிய பணிபுரையை நிறைவேற்றுங்கள் எனக் கூறிய போதும் அவர் அவ்வாறு செய்யவில்லை.
விவசாயக்காணியை தமக்கென கேட்பது நியாயம் அல்ல
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் பாதிரியாரும் நெருங்கிய உறவினர்களாக காணப்படும் நிலையில் நாம் காலாகாலமாக விவசாய செய்து வந்த காணிகளை பறித்து பாதிரியாருக்கு வழங்க பார்க்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது.
நாங்களும் கிறிஸ்தவராக காணப்படுகின்ற நிலையில் ஆசியாவிலேயே செல்வம் கொழிக்கும் தேவாலயமாக மடு தேவாலயம் காணப்படுகிறது.
மடு தேவாலயத்திற்கு சொந்தமாக 300க்கும் மேற்பட்ட வீடுகளும் காணிகளும் உள்ள நிலையில் வாழ்வாதாரத்துக்காக விவசாயம் செய்யும் காணியை தமக்குத் தர வேண்டும் என கேட்பது நியாயம் அல்ல.
இறைவனுக்கு அள்ளிக் கொடுப்போம்
நாங்களும் மடு ஆலயத்துக்கு செல்கிறோம் காணிக்கை வழங்குகிறோம் நாங்கள் நன்றாக இருந்தால் இறைவனுக்கு இன்னும் அள்ளிக் கொடுப்போம்.
இறைவனின் பெயரைப் பயன்படுத்தி எமது வாழ்வாதாரக்காணியை கேட்பதை வழங்க முடியாது
என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மேலும் இந்த விடயம் தொடர்பில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த பகுதியில் விவசாயம் செய்யும் பத்து பேருக்கே காணிகள் இல்லை.
நாம் 27 பேருக்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்குவதற்கு சம்மதம் கேட்ட நிலையில்
அவர்கள் சம்மதிக்கவில்லை என தெரிவித்ததாக கூறியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
