தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமாகும் - வைத்தியர்கள் எச்சரிக்கை

Sri Lanka GMOA Sri Lanka Strike Sri Lanka Doctors
By Rakesh Feb 09, 2026 04:53 AM GMT
Report

தீர்க்கப்படாத தொழிசார் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, இலங்கையின் இலவச பொதுச் சுகாதார மற்றும் வைத்தியசாலைக் கட்டமைப்பைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையை மென்மேலும் தீவிரப்படுத்தத் தயாராகவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 11ஆம் திகதி தமது அடுத்த கட்ட தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கை யூடியூபர்.. உதவி கோரும் கனேடிய பொலிஸார்

கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கை யூடியூபர்.. உதவி கோரும் கனேடிய பொலிஸார்

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்துக்கு

இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு தழுவிய ரீதியிலான தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர தமது மத்திய செயற்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமாகும் - வைத்தியர்கள் எச்சரிக்கை | Trade Union Action Will Intensify Doctors Warn

மருத்துவ சமூகம் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் தொழில்சார் சவால்களையே இந்த நடவடிக்கை பிரதிபலிக்கின்றது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக வசதிகள் அல்லது கொடுப்பனவுகள் அன்றி, பெரும்பாலும் தனிப்பட்ட அபாயங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ சேவைத் தேவைகளுக்கு அப்பால் வைத்தியர்கள் ஆற்றி வந்த பணிகளிலிருந்து விலகியிருப்பதே தற்போதைய நடவடிக்கையாகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக பொதுமக்களுக்கு ஏற்படும் எந்தவொரு அசௌகரியத்துக்கும் அரசும் சுகாதார அமைச்சருமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை மருத்துவ இடமாற்றங்களுடன் தொடர்புடையது எனச் சில தரப்பினரால் பரப்பப்படும் கருத்துக்களை அந்தச் சங்கம் நிராகரித்துள்ளது.

இடமாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்க கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பொதுச் சுகாதாரத் துறையின் சவால்கள்

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் சில சிரேஷ்ட அதிகாரிகளின் திறமையின்மை காரணமாக சுமார் 8ஆயிரம் மருத்துவ இடமாற்றங்கள் இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில அதிகாரிகளால் சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்களால் முரண்பாடான பகிரங்க அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும், இது அமைச்சுக்கும் அமைச்சரின் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் மேலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமாகும் - வைத்தியர்கள் எச்சரிக்கை | Trade Union Action Will Intensify Doctors Warn

அரசியல் தலையீடின்றி முறையான நடைமுறைகளின் கீழ் மருத்துவ இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று 23 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட தமது சங்கம் கோருகின்றது என்றும், தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை பரந்த அளவிலான கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசும் சுகாதார அமைச்சும் தமது கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்தால், தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த ஏகமனதாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தச் சங்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக, பொதுச் சுகாதாரத் துறையின் சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 11ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைமையகத்துக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து எடுக்கப்படும் முடிவுகள் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை தாக்கிய மர்ம நபர்.. தீவிர விசாரணையில் பொலிஸார்

தமிழர் பகுதியில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை தாக்கிய மர்ம நபர்.. தீவிர விசாரணையில் பொலிஸார்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US