நுகர்வோர் அதிகார சபையினரால் முற்றுகையிடப்பட்ட வர்த்தக நிலையங்கள் (photos)
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 8 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகர் பகுதியில் நுகர்வோர் அதிகார சபையினரால் அதிக விலையில் அரிசி விற்பனை செய்த அரிசி ஆலைகள் இன்று முற்றுகையிட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர், அரச கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த இரு வர்த்தக நிலையங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக கருத்து தெரிவித்திருந்தார்.
இதுவரை மொத்தமாக 8 அரிசி விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிக முறைப்பாடுகள்
”அண்மைகாலமாக நுகர்வோர் அதிகார சபைக்கு தொடர்ச்சியாக வர்த்தக நிலையங்களில்
அரிசி அரச கட்டுப்பாட்டை விட அதிகவிலைக்கு விற்பனை செய்கின்றதாகவும்,
பல வியாபாரிகள் அரிசியினை பல இடங்களில் பதுக்கி வைத்துள்ளதாக அதிகமான
முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதற்கமைய கடந்த வாரம் பல இடங்களில் உள்ள அரிசி ஆலைகள் வர்தக நிலையங்களை முற்றுகையிட்டு சோதனைகள் நடத்தியுள்ளோம்.
அதில் அரச கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைகளுக்கு விற்பனை செய்த 8 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்துள்ளோம்.
இதனை தொடர்ந்து இன்று புதன்கிழமை மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் உள்ள வர்த்தக நிலையைம் ஒன்றை முற்றகையிட்டபோது, அங்கு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த அந்த வர்த்தகருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளோம்.
அதனை தொடர்ந்து ஊறணி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றை முற்றுகையிட்ட போது, அங்கு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வதை கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அரச கடட்டுப்பாடான சோற்று அரிசி 220 ரூபாவும், பச்சையரிசி 210 ரூபாவும் சம்பா அரிசி 230 ரூபாவும், கீரிச் சம்பா 260 ரூபாவும் ஆகும்.
இந்த விலைகளுக்கு மேலாக விற்பனை செய்கின்ற வியாபாரிகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் எமக்கு அறிவிக்குமாறும் இதனால் இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியும்.
எனவும் இவர்களுக்கு நீதிமன்றம் ஊடடாக ஒரு இலச்சம் ரூபா தொடக்கம் 5 இலச்சம்
ரூபா வரையில் தண்டப்பணம் விதிக்கமுடியும்.
வியாபாரிகள் அரிசியை வியாபாரத்தளத்தில் இருந்து எடுத்துச் சென்று வேறு
இடத்தில் பதுக்கி வைத்துள்ளதாகவும், வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகவும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
எனவே மிக விரைவில் வீடுகளில் பதுக்கி வைத்திருக்கின்ற அரிசிகளை கண்டறிந்து பதுக்கல் சட்டத்துக்கு கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவுள்ளோம்.
எனவே நுகர்வோர் அதிகார சபை வர்த்தக நிலையங்களின் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளும் போது அதிக விலைக்கு விற்பனை செய்வதை கண்டுபிடிக்கப்படுமாயின், எந்த பாரபட்சமும் பாராது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்து சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
ஆகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் மிகவும் கவனமாக இருந்து கொள்ளவேண்டும்” என அவர் தெரிவித்தார்.



