இலங்கைக்கு இலட்சக்கணக்கில் வந்து குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்!
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தை தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூன் 21ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,104,354 ஆகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஜூன் 01ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 82,332 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
உயிரிழந்த அதிபரின் புகைப்படத்தை ஏந்தி கிளிநொச்சியில் போராட்டம் - பொலிஸாருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
சுற்றுலாப் பயணிகளின் வருகை
ஜூன் மாதத்தில் இதுவரை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 31,158 ஆகும்.

இதேவேளை, இவ்வருடத்தின் கடந்துள்ள காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 281,418 ஆகும்.
மேலும், இந்த வருடத்தில் மாதமொன்றில் பதிவான அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை பெப்ரவரி மாதத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 279,328 ஆகக் குறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமானப் பயணத்தில் ஷீட் மாஸ்க் பயன்படுத்தலாமா? திரிஷாவின் வைரல் செல்ஃபிக்கு மருத்துவர் விளக்கம் Manithan
சவுதி அரேபியா மீது ஈரான் ஆதரவுப்படைகளால் இருமுனைத் தாக்குதல்: நெருக்கடியில் மத்திய கிழக்கு News Lankasri